வவுனியாவில் பொதுஜன பெரமுன வேட்புமனு தாக்கல்!!

501

பொதுஜன பெரமுன..

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக பொதுஜன பெரமுன இன்று (20.01.2023) காலை 9.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.காதர் மஸ்தான் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை , வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.