வவுனியாவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்!!

274


வேட்புமனு தாக்கல்..வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று (20.01.2023) மதியம் 2.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.தவபாலன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் வவுனியா வடக்கு பிரதேச சபை உள்ளூராட்சி மன்றத்தில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.