கொரோனாவால் சிதைந்த கனவு… யூடியூப் மூலம் சம்பாதித்து 50 லட்சம் மதிப்புள்ள சொகுசுக் காரை வாங்கிய இளைஞன்!!

302

பீகாரில்..

இந்திய மாநிலம் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், யூடியூப் சேனல் மூலம் 50 லட்சம் மதிப்புள்ள Audi காரை வாங்கியுள்ளார். பீகாரைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் ஹர்ஷ் ராஜ்புத். சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த ஹர்ஷிற்கு கொரோனா முட்டுக்கட்டை போட்டது.

ஆனாலும் தளர்ந்துவிடாத அவர் ஊரடங்கு காலக்கட்டத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் சினிமா மற்றும் பல்வேறு விடயங்களைப் பற்றிய நகைச்சுவை வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டார்.

பார்வையாளர்களை பெற்றது. இதன்மூலம் ஹர்ஷ் ராஜ்புத் குறுகிய கால இடைவெளியில் பிரபலமானார். 33 லட்சம் பேர் அவருடைய சேனலை பின்தொடரும் நிலையில், மாதந்தோறும் ஹர்ஷ் 5 முதல் 8 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்.

அவர் கடந்த சூன் 2022 முதல் அக்டோபர் 2022 வரை கூகுள் விளம்பரப் பிரிவில் கிடைத்த தொகை சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.4.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவதாகவும கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹர்ஷ் ராஜ்புத் ரூ.50 லட்சம் மதிப்புள்ள Audi (A4) சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுதொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தனது சேனல் Brand Promotions மூலம் அவர் தனியே வருவாய் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.