வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் வெளியாகின!!

536


வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் ஏனைய இரு உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத் சந்திர தெரிவித்தார்அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கு உள்ளுராட்சி மன்றத்தின் வேட்பு மனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்,

வவுனியா தெற்கு சிங்கள பிரதே சபையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் ஒருவர் மாத்திரம் போட்டியிட முடியாது என்பதுடன் குறித்த கட்சியின் ஏனைய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.அத்துடன் ஏனைய அனைத்து கட்சிகள் , சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அத்துடன் வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகியவற்றின் வேட்பு மனுக்களின் இறுதி முடிவுகள் காத்திருப்பில் உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.