வவுனியா மாவட்டத்தில் சில கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!!

724

வவுனியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் வேட்புமனு தாக்கல் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன், சில கட்சிகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியா வடக்கு பிரதேச சபையில் சுயேட்சைக்குழு ஒன்றின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக்கப்பட்டதுடன்,

வவுனியா தெற்கு சிங்கள பிரதே சபையில் வேட்புமனுக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையில் இரு கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அத்துடன் வவுனியா மாநகரசபையில் இரு கட்சிகளும், இரு சுயேட்சைக்குழுக்களும் நிராகரிகப்பட்டுள்ளன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் இரு கட்சிகளும், இரு சுயேட்சைக் குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.