கேள்வி கேட்ட மனைவி.. ஆசிட் வீசி கொடூரமாக கொலை செய்த காதல் கணவன்!!

244

ஒடிசாவில்..

ஒடிசா மாநிலம் பாலாசோரின் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த பனிதா சிங் என்ற பெண், கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆசிட் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் அப்பெண் உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பனிதா சிங் என்பவர் கவரிங் நகை வியாபாரம் செய்துவந்துள்ளார். இவரது கணவர் தான் சந்தன் ராணா (32).

இருவரும் சில காலம் காதலித்து பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதி மகிழ்ச்சியாக வசித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு பிறகு தான் கணவர் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்துள்ளது பனிதா சிங்குக்கு.

அதாவது, இருவரும் திருமணம் செய்துக்கொள்வதற்கு முன்பே, சந்தன் ராணா வேறொரு பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதை அறிந்துகொண்டார். இதனால் பனிதா சிங் வீட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த பிப்ரவரி 20 அன்று, சந்தன் ராணா ஒரு ஆசிட் பாட்டிலுடன் தனது மனைவி இருக்கும் பீம்புரா கிராமத்தை அடைந்தார். அங்குசென்று குடும்பம்நடத்த மனைவியை அழைத்துள்ளார். அவர் திரும்பி வர மறுத்ததால் சந்தன் ராணா அவரது மனைவி பனிதா சிங் மீது ஆசிட் வீசினார்.

இதனை தடுக்க வந்த பனிதா சிங்கின் மூத்த சகோதரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மீதும் ஆசிட் வீசினார். .பனிதா சிங் முதலில் பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரது காயங்களின் மோசமான தன்மையைக் கருத்தில் கொண்டு கட்டாக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார்.

காயமடைந்த பனிதா சிங்கின் சகோதரரி, அவரது மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடத்தும் போலீசார் சந்தன் ராணாவை தேடி வருகின்றனர்.

7 நாட்களாகியும் அவரை பிடிக்க முடியவில்லை. எனினும் சந்தன் ராணாவின் முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர். இவரது தூண்டுதல்பேரில் தான் ஆசிட் வீசியதாக கூறி நடவடிக்கை எடுத்துள்ளனர்.