வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

430

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு..

நியாயமற்ற வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (01.03.2023) காலை 8.00 மணி தொடக்கம் 24 மணித்தியாலய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாடளவிய ரீதியில் வரி திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாழ்க்கைச் செலவினை குறைக்க வேண்டும் எனவும் கோரி துறைமுகம், ரயில்வே, பெட்ரோலியவளம், வங்கித்துறை உள்ளிடட 40 தொழிற்சங்களினால் எதிர்ப்பு போராட்டங்கள் , பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட வைத்தியர்கள் சேவைகள் ஈடுபடுவதுடன், வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.