5 வருடங்களாக உருகி காதலித்த இளம் பெண்ணை பட்டபகலில் கொலை செய்த இளைஞர்!!

196


கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம், முருகேஷ்பால்யா என்னும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லீலா என்ற பட்டதாரி பெண் பணிபுரிந்து வந்தார். அதே போல், டோம்லூரில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தில் தினகர் என்ற இளைஞரும் பணிபுரிந்து வந்தார்.அப்படி இருக்கையில், தினகர் மற்றும் லீலா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களின் திருமணம் குறித்து வீட்டில் பேசும் தினகர், லீலாவிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், தனது பெற்றோரிடம் தினகரை திருமணம் செய்வது குறித்து லீலா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல சமுதாயத்தை காரணம் காட்டி அவர்கள் திருமணத்தை மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.


இது பற்றி தனது காதலனான தினகரிடம் பெற்றோர் கூறிய விஷயத்தை லீலா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் ஆவேசம் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.


அதே போல, கோபத்தில் இருந்த தினகர், லீலா வேலை பார்க்கும் நிறுவனத்தின் வாசலிலும் காத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து, வழக்கம் போல் வேலை முடிந்து லீலா திரும்பி உள்ள சூழலில், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவத்தை அவரது காதலர் தினகர் செய்துள்ளார்.

தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐந்து ஆண்டுகளாக காதலித்த காதலி என்றும் பாராமல், லீலாவின் உடலில் குத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த லீலாவை குத்தி விட்டு அங்கிருந்து தினகரும் தப்பி ஓடி உள்ளார்.


இந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த சூழலில், அவர்கள் உடனடியாக லீலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், லீலா கொலை செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தினகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.