மர்மப் பொருளால் கால் பாதத்தை இழந்த நபர் : யாழில் சம்பவம்!!

548

Blast

யாழ். எழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறை புகைக்கூட்டிலிருந்த கிரேனைட் வெடித்ததால் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் சந்திரகுமார் பிரதீபன் (22) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இன்று புகைக்கூட்டை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, கிரேனைட் குண்டு வெடித்துள்ளது.

படுகாயமடைந்த இவரை உடனடியாக கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.