வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலய வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2023!!

1272

வருடார்ந்த இல்ல விளையாட்டு போட்டி..

செட்டிகுளம்- வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் அதிபர் தங்கதுரை மதிவண்ணன் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக விரிவுரையாளர் வி.அனோஜன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு கல்வி வலயபிரதி கல்விப் பணிப்பாளர் வீரசிங்கம், வவுனியா தெற்கு கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் செந்தில்குமரன்,

மற்றும் கௌரவ விருந்தினர்களாக விளையாட்டு உத்தியோகத்தர் பாருக் பாசில், ஆசிரிய ஆலோசகர் யூட் பரதாமாறன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோசப் ஜெயகெனடி,

மற்றும் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பழைய மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இறுதிமட்ட விளையாட்டுப்போட்டிகள் இடம்பெற்றமையுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.