இல்ல மெய்வல்லுனர் போட்டி..

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2023ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் (02.03) பாடசாலை வளாகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலையின் முதல்வர் அரிபூரணநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக ,பாடசாலையின் பழைய மாணவரும் சட்டத்தரணியுமான அருனகிரிநாதன் திலீப்காந்தன் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் சிறப்பு விருந்தினராக உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) செந்தில்குமரன், கெளரவ விருந்தினர்களாக ஆசிரிய ஆலோசகர் (உடற்கல்வி) யூட் பரதமாறன், பாடசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் றொபேர்ட்,

உபசெயலாளர் டினேஷ் ரொஷின்டன், பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் ப.கார்த்தீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் பாடசாலை மாணவிகளால் தமிழில் பாடப்பட்டமையுடனும் தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

இறுதியாக மெய்வல்லுனர் இறுதிப் போட்டியில் பீஷ்மர் இல்லம் (மஞ்சள்) 3ம் இடத்தையும், துரோணர் இல்லம் (சிவப்பு) 2ம் இடத்தையும், விதுரர் இல்லம் (பச்சை) 1ம் இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





