பச்சை துரோகத்தில் சிக்கிய அப்பாவி… தொழிலதிபருக்கு இளம் பெண்ணால் நேர்ந்த சோகம்!!

404

சென்னையில்..

சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி. 42 வயதாகிறது. இவர் ஒரு பிசினஸ்மேன். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். திருமணமாகிவிட்டது. ஒரு மகன் இருக்கிறார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டார். எனவே, மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நண்பருக்கு மதுரையில் திருமணம் நடந்துள்ளது.

அந்த கல்யாணத்துக்காக ராம்பாலாஜி சென்றிருக்கிறார். அப்போது அந்த கல்யாணத்தில் வித்யாஸ்ரீ என்ற பெண்ணை சந்தித்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்தவர்தான் வித்யா. இந்த பெண்ணுக்கு 31 வயதாகிறது.

இவருக்கும் கல்யாணமாகிவிட்டது. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனால், இந்த பெண்ணும், கணவரைவிட்டு பிரிந்து டைவர்ஸ் வாங்கிக்கொண்டு, தனியாக வசித்து வருகிறார். 2 பேருமே டைவர்ஸ் என்பதால், அறிமுகமான கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நட்பாக பேசியுள்ளனர்.

ஒருகட்டத்தில், ராம்பாலாஜியுடன் நெருங்கி பேசிய வித்யா, நாம் 2 பேரும் 2-வது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று ராம்பாலாஜியுடன் சொல்லி உள்ளர். அதற்கு ராம்பாலாஜியும் சம்மதம் தெரிவித்தார்.

எப்போது திருமணம் செய்து கொள்வது என்று இருவருமே முடிவெடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இவர்கள் பழகி வந்துள்ளனர்.. ராம்பாலாஜியிடம் அவ்வப்போது தன்னுடைய தேவைக்காக வித்யா பணம் கேட்டுள்ளார். கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்தானே என்பதால், அவர் கேட்கும்போதெல்லாம் ராம்பாலாஜியும் பணம் தந்துள்ளார்.

வித்யா செலவுக்கு பணம் கேட்கும்போதெல்லாம் மறுக்காமல், அவரது அக்கவுண்ட்டில் பணத்தை அனுப்பிவிடுவாராம் ராம்பாலாஜி. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வித்யாவின் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் வரை பணம் அனுப்பியதாக தெரிகிறது. இதனிடையே இவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து கொள்வார்களாம்.

அப்படி நேரில் சந்திக்கும்போதெல்லா வித்யாவுக்கு நகைகளை தந்து அழகுபார்த்துள்ளார் ராம்பாலாஜி. ஒருகட்டத்தில், கல்யாண பேச்சை எடுத்துள்ளார் ராம்பாலாஜி. கல்யாணம் என்று சொன்னதுமே வித்யாவின் முகம் மாறிவிடுமாம். இப்போதைக்கு டைம் சரியில்ல. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே என்று ஏதாவது சாக்கு சொல்லியே வந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இதை பெரிதாக ராம்பாலாஜி கண்டுகொள்ளவில்லை என்றாலும், கல்யாண பேச்சையே வித்யா தவிர்த்து வருவது, திடீரென சந்தேகத்தை உண்டுபண்ணியது. அதுமட்டுமல்ல, கடந்த சில வாரங்களாகவே வித்யாவை காணோமாம்.

அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப்பிலேயே உள்ளதாம். இதற்கு பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று ராம்பாலாஜி உணர்ந்துள்ளார். எனவே, பணம், நகைகளுடன் மா.ய.மா.ன வித்யாஸ்ரீ மீது மோ.ச.டி புகாரை மதுரை எஸ்பி அலுவலகத்தில் தந்தார்.

இதையடுத்து போலீசார் வித்யாவுக்கு தே.டுதல் வ.லையை வீ.சி, இ.றுதியாக அவரை பி.டித்தனர். வி.சாரணையும் நடத்தினர். அப்போது பணம், நகை பெற்றுக்கொண்டது உறுதியானது.

இதையடுத்து, தன்னுடைய அப்பாவின் நிலத்தை விற்று, அந்த பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக உறுதிதந்தார் வித்யா. இதற்காக 5 மாதகாலம் டைம் கேட்டார். ஆனால் மறுபடியும் ஏ.மாற்றி உள்ளார். இந்த பணத்தை கடைசிவரை திருப்பி தரவே இல்லையாம்.

இதனால் அ.திர்ந்துபோன ராம்பாலாஜி, வித்யா விஷயத்தில் தானே நேரடியாக இறங்கினார். அப்போதுதான் இன்னொரு இடி ராம்பாலாஜி தலையில் வந்து விழுந்தது. வித்யாவுக்கு இன்னொரு காதலன் இருக்கிறாராம்.

அவர் பெயர் அஜித். 2 பேருமே ஒரு வீட்டில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து உறைந்து போனார் ராம்பாலாஜி. இவர்கள் 2 பேரும் சேர்ந்துதான், இத்தனை மாதமாக தன்னை மோ.ச.டி செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, கோர்ட்டுக்கு ஓடினார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து தன்னை மோ.ச.டி செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், வாடிப்பட்டி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

இது தொடர்பான வி.சாரணை முடிவில், சம்பந்தப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்த அலங்காநல்லூர் போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வித்யாஸ்ரீ, அஜித் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் நேற்றுதான் கைது செய்தனர்.

மோசடி குறித்த வி.சாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. தானாகவே வலிய வந்து 2வது கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்ற ஆசைவார்த்தை கூறிய பெண்ணுக்கு சம்மதத்தை சொல்லி, ரூ.50 லட்சம் வரை பணத்தையும் தந்து, டிசைன் டிசைனாக நகைகளையும் வாங்கி போட்டு அழகு பார்த்த ராம்பாலாஜி, ஏமாந்துபோன அ.திர்ச்சியில் உறைந்து உள்ளார்.