பெண்ணின் இதயத்தை உருளைக்கிழங்குடன் சமைத்து சாப்பிட்ட நபர்.. நெஞ்சு பதைபதைக்கும் கொடூரம்!!

409

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் ஓகலஹோமா மாகாணத்தில், ஒரு பெண்ணைக் கொலை செய்து, அந்த பெண்ணின் இதயத்தை வெட்டி, தனது சொந்த குடும்பத்திற்கே சமைத்து கொடுத்து சாப்பிடுமாறு அவர்களை வற்புறுத்தியிருக்கிறார்.

44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன் கடந்த சில வருடங்களுக்கு முன் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தான்.

2021ல் சிறையிலிருந்து வெளியே வந்த ஆண்டர்சன், ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப்பின் என்ற பெண்ணை கொலை செய்து அந்த பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துள்ளார்.

அதனை அப்பெண்ணின் உறவினரான மாமாவின் வீட்டுக்கு சென்று உருளைக்கிழங்கு கறியுடன் சேர்த்து சமைத்துள்ளான். அதனை அப்பெண்ணின் மாமா, அத்தை மற்றும் அவர்களின் 4 வயது பேத்தியையும் அதனை சாப்பிட சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

இறுதியில் தம்பதியினரையும், அவர்களது 4 வயது பேத்தியையும் கொலை செய்துவிட்டான். இதன் பிறகு ஆண்டர்சன் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்தான்.

இச்சம்பவம் குறித்த விசாரணையில் ஆண்டர்சன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். இதனால் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஆண்டர்சனின் அத்தை குடும்பத்தினர் ஓக்லஹோமா ஆளுநர் மற்றும் சிறை பரோல் வாரியத்திற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.


ஓக்லஹோமாவின் ஆளுநர் கெவின் ஸ்டிட் ஆண்டர்சனை விடுதலை செய்த ஒப்புதல் செய்த போது, அவர் 20 ஆண்டு சிறைத்தண்டனையை வெறும் மூன்றாண்டுகள் மட்டுமே அனுபவித்துஇருந்ததாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசு சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க சிறிய குற்றங்களை செய்தவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் இருந்தது. அந்த பட்டியலில் தவறுதலாக ஆண்டர்சன் பெயரும் இடம்பெற்று விட்டது. ஆனால் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டார் என இறுதிக்க் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.