வவுனியா குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு : உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்ட பதில் நீதிபதி!!

3002

வவுனியா குளத்தில் இருந்து..

வவுனியா, குடியிருப்பு குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த குளப்பகுதி ஊடாக இன்று (19.03) காலை பயணித்த நபரொருவர் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த நிலையில்,

வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன், வவுனியா பதில் நீதவான் தி.திருவருள் மற்றும் பதில் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 25 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவித்துள்ள பொலிசார், அம்மா என பச்சை குத்தியுள்ளதுடன், கழுத்தில் சிவப்பு நூலும், கையில் ஆலய நூலும் அணிந்துள்ளதுடன்,

ஒரு கையில் நீல நிற இறப்பர் பட்டி ஒன்றும் அணிந்துள்ளார். இறந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.