பெண் வேடத்தில் ஆண்கள் : அசந்துபோன இளைஞர்கள் : விநோத திருவிழா!!

396

கேரளாவில்..

பெண் வேடமிட்டு விநோத திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆண்கள், வைரலாகும் புகைப்படங்கள். இந்தியாவை பொறுத்தவரை பல மதங்கள் உள்ளது, இங்கு பல வித்யாசமான சடங்குகள் பூஜை முறைகள் உள்ளது.

அந்த வகையில் கேரளாவில் ஆண்கள் பெண்களை போல அலங்காரம் செய்து கொண்டு கடவுளை வழிபாடு செய்யும் விநோத வழக்கம் உள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாவரா என்ற கிராமத்தில் உள்ள கொட்டங்குளங்கரா பகவதி அம்மன் கோயில்.

இது சுயம்புவாக தோன்றிய கடவுளாக கருதப்படுகின்றது . இந்த கோயிலில் ஒரு விநோத சடங்கு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சடங்கில், ஆண் பக்தர்கள் பெண்களை போல வேடமிட்டு கடவுளை வழிபடுகின்றனர்.

ஆண்கள் பெண்களை போல மாறி நேர்த்திக்கடன் செலுத்துவது இங்குதான் என்று கூறப்படுகின்றது . இதன்போது ஆண்கள் ஏதேனும் பாவங்கள் செய்திருந்தால் இவ்வாறு பரிகாரம் செய்தால் பாவமெல்லாம் போகும் எனபது இங்கு உள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

முதலில் உள்ளூர் திருவிழாக இருந்தது தற்போது உலகமெங்கும் உள்ள பல ஆண்கள் பங்கேற்று இந்த சடங்கில் கலந்துகொள்கின்றனர் குறிப்பாக லண்டனில் இருந்தும் ஆண் பக்தர்கள் வருவதாக கூறப்படுகின்றது.

இந்த விநோத சடங்கில் பங்கேற்கும் ஆண்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 ஆயிரம் வரை ஒப்பனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. யாரும் பெண் வேடம் தரிக்கும் ஆண்களை கேலி செய்வதில்லை.

இது கேரளாவின் மிக முக்கிய பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. பெண் வேடத்தில் ஆண்கள் வலம் வந்த காட்சியைப்பார்த்து இளைஞர்கள் ஜொள்ளு விட்ட விநோத திருவிழா இணையத்தில் வைரலாகி வருகின்றது.