அப்போது எனக்கு 6 வயது.. ரெண்டு ஆண்கள் வந்தார்கள்.. பின்னர் நடந்த விபரீதம்.. மாவட்ட ஆட்சியருக்கு நடந்த சோகம்!!

602

கேரள மாநிலத்தில்..

மீடூ அனுபவங்கள் பலரும் சொல்லி அதிரவைத்து வருகின்றனர். அண்மையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு, ஐந்து வயதில் பெற்ற தந்தையால் பாலியல் தொல்லைகளை அனுபவித்தேன்.

அப்போது எனக்கு எதிர்க்கும் தைரியம் வரவில்லை. 15 வயதில்தான் எனக்கு எதிர்க்கும் தைரியம் வந்தது சொல்லி பல விவாதங்களை தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில், கேரளாவில் ஆட்சியர் திவ்யா தனது மீடூ துயரத்தை பகிர்ந்திருக்கிறார்.

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஆட்சியராக இருப்பவர் திவ்யா சேச ஐயர். அடிப்படையில் மருத்துவரான திவ்யா, குழந்தை நலன் சார்ந்த பல நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அப்படி ஒரு நிகழ்வில் பங்கேற்று பேசிய திவ்யா, தனது குழந்தை பருவத்தில் மோசமான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசினார். ’’அப்போது எனக்கு ஆறு வயசு. ஒரு நாள் வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரம் பார்த்து இரண்டு ஆண்கள் வந்தார்கள்.

அவர்களின் முகம், அடையாளம் எதுவும் என் நினைவில் இப்போது இல்லை . ஆனால் அவர்கள் நடந்து கொண்ட விதம் என் ஆயுள் வரைக்கும் மறக்க முடியாத அளவிற்கு வடுவாக இருக்கிறது.

என்னிடம் பரிவாகப் பேசுவது போல பேசி, தொட்டு தொட்டு விளையாடுவது போல பேசிக்கொண்டே இருந்தவர்கள் அத்து மீற ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் என் ஆடையை கழற்ற முயற்சித்தார்கள். நான் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன்.

பெற்றோரிடம் சொல்லி அழுததும் அவர்கள் என்னை அரவணைத்து என் அச்சத்தை போக்கினார்கள். இந்த சம்பவம் என்னை ரொம்பவே பாதித்துவிட்டது. அதனால் தான் சொல்கிறேன் …ஆணோ- பெண்ணோ குழந்தைகள் வளர்ப்பில் ரொம்பவே கவனம் தேவை. குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் உள்ளிட்டவத்தை பயிற்றுவிக்க வேண்டும். அறியா வயதில் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் தான் குழந்தைகளின் மகிழ்ச்சியை பாதிக்கும் . அதனால் குழந்தை வளர்ப்பில் எச்சரிக்கை தேவை’’ என்று பேசினார்.