வவுனியாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து : மாணவன் உள்ளிட்ட இருவர் படுகாயம்!!

5500
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

விபத்து..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

வவுனியாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், மாணவன் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (23.04) இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் யாழ் ஐஸ்கிறீம் வீதியில் திரும்ப முற்பட்ட போது,

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

அதே திசையில் வந்த பட்டா ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மாணவனை மோதியதுடன், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மாணவன் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகிய இருவரும் பயடுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவனின் உடல் நிலை மோசமடைந்துள்ளதால் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890