தந்தையின் பணத்தை திருடி அயல்வீட்டு குடும்பப் பெண்ணுக்கு நகை பரிசளித்த மாணவன்!!

1107

யாழில்..

யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மாணவரான மகன் வர்த்தகரின் 3 லட்சம் ரூபா பணத்தை ஏரிஎம் இயந்திரம் மூலம் எடுத்து, சங்கிலி வாங்கி அயல் வீட்டு இளம் குடும்பப் பெண்ணிற்கு பரிசளித்த சம்பவம் பொலிஸ் நிலையம்வரை சென்றுள்ளது.

தனது வங்கி அட்டையிலிருந்து தனக்கு தெரியாது 3 லட்சம் ரூபா பணம் எடுக்கப்பட்டுள்ளதை அவரது போனில் வந்த குறுந்தகவல்களை பார்த்த வர்த்தகர் அதிர்ந்துள்ளார்.

அவர் வங்கி அட்டை மனைவியிடமே வர்த்தகர் கொடுத்து வைத்திருந்தார். இந்நிலையில் மனைவியிடம் கொடுக்கப்பட்ட அட்டையை மகன் எடுத்தே இந்த திருவிளையாடலை புரிந்துள்ளான்.

இதனையடுத்து வர்த்தகர் மனைவியிடம் விசாரணை நடத்தி அவருக்கு எதுவும் தெரியாது என சொல்ல பொலிசாரிடம் பணம் களவாடப்பட்டமை தொடர்பில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து வங்கி சிசிரிவி கமராவைப் பரிசோதனை செய்த போது மகனே குறித்த பணத்தை எடுத்துள்ளதை பொலிசார் அறிந்துள்ளனர். மகன் பணம் எடுத்ததை பொலிசார் மூலம் அறிந்த வர்த்தகர் உடனடியாக தனது முறைப்பாட்டை ரத்து செய்ய முயன்றார்.

ஆனாலும் பொலிசார் சம்மதிக்காது குறித்த பணத்தை மகன் எடுத்து போதைப் பொருள் போன்ற நடவடிக்கைக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன் பின்னர் மகனிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பணத்தை அட்சயதிருதியை அன்று எடுத்து யாழில் நகைக் கடை ஒன்றில் தங்கச் சங்கிலி வாங்கியதாக கூறியுள்ளார். சங்கிலி எங்கே? என பொலிசார் விசாரணை செய்த போது அந்தச் சங்கிலியை அயல் வீட்டுப் பெண்ணிடம் இரவலாக கொடுத்ததாக கூறியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த பெண்ணும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது தனது வீட்டுக்கு வரும் மாணவன் கழுத்தில் ஏன் ஒரு நகைகளும் அணிவதில்லை என கேட் பின் தனக்கு நகை வாங்கி தருவதாக கூறி சங்கிலியை தந்ததாக கூறியுள்ளார்.

அந்த சங்கிலியை வங்கி ஒன்றில் அடைவு வைத்து தனிநபர் ஒருவரின் கடனை கொடுத்தாக பெண் கூறினார். பெண்ணை கைது செய்யுமாறு வர்த்தகர் அழுத்தம் கொடுத்த போதும் குறித்த பெண்ணை கைது செய்யாது பொலிசார் விடுவித்துள்ளதாகத் தெரியவருகின்றது. அதேவேளை 27 வயதான இரு குழந்தைகளின் தாயாரான பெண்ணின் கணவர் மதுவுக்கு அடிமையானவர் எனவும் தெரியவருகின்றது.