மனைவி கூறிய வார்த்தையால் நாளொன்றுக்கு 5 கோடி ஊதியம்.. உலகத்தை கலக்கும் தமிழர் சுந்தர் பிச்சை!!

531


சுந்தர் பிச்சை..



கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, மனைவியின் அறிவுறுத்தலால் தற்போது நாளொன்றுக்கு 5 கோடி ஊதியமாக பெறுகிறார். கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சுந்தர் பிச்சை. தமிழகத்தின் மதுரையில் 1972ஆம் ஆண்டு பிறந்த இவர், ஐஐடி காரக்பூரில் இரசாயன பொறியியல் படித்தார்.



அப்போது தனது மனைவி அஞ்சலியை தோழியாக சந்தித்தார் சுந்தர் பிச்சை. காதலில் விழுந்த இவர்கள், கல்லூரியிலேயே நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். பின்னர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படிக்க சென்றதால் சுந்தர்பிச்சை தனது மனைவியுடன் நீண்ட தூர உறவில் இருந்தார்.




அதனைத் தொடர்ந்து ஒரு வழியாக இருவரும் 2003ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அஞ்சலி பிச்சை 1999ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை Accenture நிறுவனத்தில் பணிபுரிந்தார்.


MBA படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, 2004ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்தார். படிப்படியாக முன்னேறிய சுந்தர் பிச்சை, 2019ஆம் ஆண்டு கூகுளின் CEO ஆக உயர்ந்தார்.

அதேபோல் அவரது மனைவி அஞ்சலி பிச்சை, Intuit என்ற மென்பொருள் நிறுவனத்தில் வணிக இயக்க மேலாளராக பணிபுரிகிறார். தற்போது உயர்நிலையில் சுந்தர் பிச்சையின் வெற்றியில் அவரது மனைவி அஞ்சலி பிச்சை முக்கிய பங்கு வகித்து வருகிறார்.


உதாரணமாக, ஒருமுறை யாஹூ மற்றும் ட்விட்டரில் இருந்து சுந்தர் பிச்சைக்கு வாய்ப்புகள் வந்தபோது, அவர் கூகுளில் இருந்து வெளியேறுவதாக மனைவியிடம் கூறியுள்ளார்.

ஆனால், அவரோ கூகுலிலேயே தொடர்ந்து பணியாற்றுமாறு அஞ்சலி பிச்சை அறிவுறுத்தியுள்ளார். மனைவியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்த சுந்தர் பிச்சை, தற்போது நாளொன்றுக்கு 5 கோடி ஊதியம் பெறுகிறார்.

இன்று உலகின் பாரிய மென்பொருள் நிறுவனத்தை நடத்தும் சுந்தர் பிச்சை, தனது வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் மனைவி அஞ்சலி என கூறியுள்ளார்.

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc 2022ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சைக்கு 22.6 கோடி டொலர்களை வழங்கியது. சுந்தர் பிச்சையின் பங்கு மதிப்பு 1788 கோடி ஆகும். கூகுள் ஊழியர்களின் சராசரி ஊதியம் 2.42 கோடி ஆகும். கடந்த ஜனவரி மாதம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.