யாழில் மீண்டும் ஒரு கோர விபத்து : பரிதாமாக இளைஞர் உயிரிழப்பு!!

841

யாழில்..

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகனம் மோட்டார் சைக்கிள் விபத்தில் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

இன்று அதிகாலை 1 மணியளவில் தனது தேவை நிமிர்த்தம் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது எதிரே வந்த வாகனம் மோதிய விபத்தில் இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது .

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவத்தில் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த சத்தியநாதன் சத்தியானந்தன் வயது 34 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

அதேவேளை யாழ் அல்லைபிட்டியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.