மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேசத்தில் பியூட்டி பார்லருக்கு செல்ல கணவன் தடுத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்தவர் பல்ராம். இவர் 15 ஆண்டுகளுக்கு முன் ரீனா (34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ரீனா அழகு நிலையத்திற்கு செல்வதாக பல்ராம்மிடம் கூறியுள்ளார். ஆனால், அழகு நிலையத்திற்கு செல்ல கூடாது என்று பல்ராம் ரீனாவை தடுத்துள்ளார்.
இதனால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. மனம் உடைந்த ரீனா தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பல்ராம், மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ரீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான கணவன் பல்ராமனிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.