களுத்துறை மாணவி விடுதியிலிருந்த போது ஆசிரியரிடமிருந்து வந்த அழைப்பு.. விடுதி உரிமையாளரின் மனைவியும் சிக்கினார்!!

1490

களுத்துறையில்..

களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஆசிரியரொருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

களுத்துறையில் உயிரிழந்த 16 வயதான பாடசாலை மாணவியின் தொலைபேசி தரவுகளை கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த மாணவி உயிரிழந்த தினத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலப்பகுதியில், மாணவியின் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட ஆசிரியர் ஒருவர் நேற்று (10.05.2023) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது “குறித்த மாணவியை தனக்கு நன்கு தெரியும் என ஆசிரியர் கூறியதாகவும், விசாரணையில் மாணவி தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், என்றபோதும் விசாரணையின் ரகசியத்தன்மை காரணமாக அந்த தகவல்கள் அனைத்தும் தற்போது வெளியிடப்பட மாட்டாது என்றும்” பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேவேளை பலர் மாணவிக்கு தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் மாணவியின் தொலைபேசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில், இந்த சம்பவம் தொடர்பில் மாணவி தங்கிய விடுதியின் உரிமையாளரினது மனைவி இன்று (11.05.2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியமைக்காகவும், சிறுமிக்கு தங்குமிடங்களை வழங்குவதற்கு முன்னர், அவரது அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களைச் சரிபார்க்க தவறியதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.