சிங்கள மாணவியால் நெகிழ்ச்சியடைந்த யாழ்ப்பாண பெண்.. பலரையும் கவர்ந்த செயல்.!!

1205

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தியகமவில் இடம்பெற்ற இளையோருக்கான மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

மேலும், வல்வெட்டித்துறை பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் 2 பதக்கங்களை வென்றார். 18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான பரிதிவட்டம் எறிதலில் தங்கப்பதக்கமும் சம்மட்டி எறிதலில் வௌ்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.

இதேவேளை, மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த யாழ். மாணவி பயன்படுத்தும் தரமற்ற நிலையில் இருந்த சம்மட்டியை கொட்டாவ வடக்கு தர்மபால மகா வித்தியாலய மாணவியான சனுமி தில்தினி பெரேராவும் அவரது பயிற்சியாளரும் அவதானித்துள்ளனர்.

இதையடுத்து யாழ்ப்பாண மாணவிக்கு குறித்த சிங்கள மாணவி உயர் ரக சம்மட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியதுடன், வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு இனவாத செயற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடு பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.