தென்னிலங்கையில் பேசு பொருளான யாழ் பல்கலைக்கழக காதல் கதை!!

12787

தென்னிலங்கையில்..

யாழ் பல்கலைகழ்கத்தில் ஆரம்பித்த ஒரு காதல் கதை சிங்களப் பகுதியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவோரும் உண்டு. ஏனெனில் உண்மையான காதலுக்கு இனம், மதம் , மொழி என்பவற்றை தாண்டி மனங்களை மட்டுமே அவர்கள் நேசிக்கின்றனர்.

அவர்கள், சிங்களவர்கள், இவர்கள் தமிழர்கள் என்பதை தாண்டி நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்கின்ற உணர்வு கடந்த கால குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுடெண்ழுந்து சர்வாதிகாரமாக மக்களை ஆண்டவர்களை வீட்டுகளுக்குள் பதுங்கிக்கொள்ளவைத்த சம்பவமும் நம் நாட்டில் அரங்கேறியுள்ளது.

அதேபோலவே 2016 ஆண் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் இன, மத மொழி கடந்து இதயத்தைக் கொள்ளைகொண்ட காதல் ஓர் காதல் கதைதான் இது. தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள இளைஞன் யாழ் பல்கலைக்கு கற்கவந்தபோது தமிழ் யுவதி மீது காதலில் விழுகின்றார்.

தென்னிலங்கை இளஞருக்கு தமிழ் தெரியாது தமிழ் யுவதிக்கு சிங்களம் புரியாது . அவளுக்காக அவன் தமிழ் கற்றுக்கொள்கிறான். ஒரு நாள் நான் உன்னை காதலிக்கிறேன் என தமிழிலேயே தன் இதயத்தைத் திறந்து காட்டினான் அந்த சிங்கள இளைஞன்.

அதன் பின்னர் அவனும் அவளும் ஒருவாரம் பேசிக்கொள்ளவில்லை மீண்டும் ஒருவாரத்தின் பின்னர் இருவரும் பேசிக்கொண்டார்கள். அப்போது நான்உன்னை காதலிக்கிறேன் என்று மீண்டும் சொன்னான் அந்த இளைஞன். அவள் பதிலாக ஒரு புன்னகை மட்டுமே அவனுக்கு கிடைத்தது.

அந்த நட்பு ,அந்தக் காதல்,அந்த சிங்கள தமிழ் இளைஞர் யுவதிகளை கிடையிலான அந்தஉறவு தொடர்கிறது. ஒரு நாள் அவன் அவளுடன் பேசாமல் உறங்கச் சென்று விடுகிறான். திடீரென ஏதோ ஒரு உந்துதல் அதிகாலையில் கண் விழித்து அவர் கைபேசியை பார்க்கிறான். அங்கே அவள் அனுப்பிய குறுஞ்செய்தி,

அதிலே நான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனாலும் எப்படியும் என் உறவினர்களுக்கு உன்னை பிடிக்காது. ஆனால் என் பெற்றோரை தாண்டி உன்னிடம் என்னால் வந்து விடவும் முடியாது.வீணாக உன் இதயத்தில் ஆசைகளை ஏற்படுத்திவிட எனக்கு பயமாகஇருக்கிறது என அவள் தனது ஆதங்கத்தை அனுப்பி இருந்தாள்.

இவ்வாறு ஆரம்பித்த அவருடைய காதல் படிப்படியாக வளர்ச்சி அடைந்து பல சவால்களுக்கு மத்தியில் அவர்களுடைய காதல் பயணிக்கிறது. இவர்கள் நட்பால் தொடர்ந்த கட்டுக்கதைகள்,அவதூறுகள், வதந்திகள் என அவருடைய காதலை பாதிப்படையச் செய்கிறது.

இந்த நிலையிலே நாக விகாரையின் படிக்கட்டுகளில் அமர்ந்து இருவரும் கைகோர்த்தபடி அழுகின்றனர். அதன் பின்னர் நாட்கள் செல்லசெல்ல சில ஆதரவுகள் பல எதிர்ப்புகள் என அத்தனையும் கடந்து 2023ஆம் ஆண்டு நான்காம் மாதம் 25ஆம் திகதி நண்பர்கள் உறவினர்கள் ஆதரவுடன் அந்தகாதல் கதை திருமணத்தில் முடிவடைகின்றது.

இந்த காதல் ஜோடியின் கதைதான் தென்னிலங்கை மக்களிடையேயும் இணையவாசிகளின் இதயத்தைக் கொள்ளை கொண்ட ஒரு நிகழ்வாக பதிவுசெய்யப்படுகிறது. தற்போது அந்த தென்னிலங்கை இளைஞர் தமிழ் மக்களுக்கு சிங்களமும் சிங்கள மக்களுக்கு தமிழும் படிப்பிக்கின்றாராம்.

சினிமாவில் மட்டுமே இப்படியான சம்பவங்களை நாம் பார்த்து மகிழ்ந்திருப்போம். பல சவால்களை தாண்டி இன்று தம்பதிகளாய் இணைந்துள்ள அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.