யானைகளின் நடமாட்டம் இருப்பதாக சுற்றுலா வழிகாட்டி தன்னிடம் தெரிவிக்கவில்லை : படுகாயமடைந்த இளைஞன் புகார்!!

1571


தியலுமவில்..



கொஸ்லந்த, தியலும பிரதேசத்தில் கூடாரம் அமைத்து முகாமிட்டிருந்த இடத்தில் யானைகளின் நடமாட்டம் இருப்பதாக சுற்றுலா வழிகாட்டி தன்னிடம் தெரிவிக்கவில்லை என காட்டு யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.



தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற 22 வயதான தனுஷ்க மதுஷன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.




குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கியவுடன் வழிகாட்டி ஒருவர் ஓடிவந்ததாகவும் அந்த இடத்தை தானே சுத்தம் செய்ததாகவும் அங்கே கூடாரத்தை அமைக்குமாறு தெரிவித்திருந்தாக படுகாயமடைந்த இளைஞன் மேலும் தெரிவித்துள்ளார்.


பின்னர் அங்கே கூடாராம் அமைத்து நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டதாகவும் அதன் பின்னர் சிறிது நேரம் உறங்கியபோதே நாய் குரைக்கு சத்தம் கேட்டு அவதானித்த போது யானை அநசவை அவதானித்ததாகவும் சுமார் 4 மணித்தியாலங்களாக உயிருக்கு பொராடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யானை நடைபாதையின் குறுக்கே கூடாரம் அமைந்திருந்த நிலையில் அவ்வழியே சென்ற யானை இருவரையும் தாக்கியிருந்தது. இந்த தாக்குதலில் 23 வயதுடைய மாத்தறை கெகுநடுர பிரதேசத்தில் வசிக்கும் தருஷி கவீஷா என்ற யுவதி உயிரிழந்தார்.உயிரிழந்த யுவதின் உடல் இன்று அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.