இலங்கையில் விரைவில் இலத்திரனியல் கடவுச்சீட்டு.. புதிய முறை தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!!

367

கடவுச்சீட்டு..

கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (22.05.2023) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதேவேளை இவ்வருடத்திற்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறையை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளமை தொடர்பில் வெளியான தகவல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், “எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அவ்வாறான அச்சுறுத்தல் இருக்கலாம் என எனக்கு புலனாய்வு அறிக்கை கிடைத்துள்ளது. ஆனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருமென்று அறிந்தே இந்த பொறுப்பை ஏற்றேன்.

இப்போது நான் இங்கு இருக்கும் போதே போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும். அப்படி மிரட்டல்கள் இருந்தாலும் ஒரு அடி கூட பின்வாங்கமாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.