திருடிக்கொண்டு ஓடும் போது கிணற்றில் வீழ்ந்த திருடன் : பாதுகாப்பாக மீட்ட பொலிஸார்!!

708

வலகும்புரவில்..

வீடு ஒன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடன் அங்கிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிய பின்னர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கிணற்றில் வீழ்ந்த சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் அலவ்வ பஹல வலகும்புர பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த வீட்டிற்குள் திருடன் பிரவேசித்த வேளை அனைவரும் உறக்கத்தில் இருந்துள்ளனர்.

அதனால் திருடன் பணத்தையும் பொருட்களையும் திருடும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளான். அந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக வீட்டு உரிமையாளர் கண் விழித்து கொண்டுள்ளார்.

இதனால் செய்வதறியாது தவித்த அந்த திருடன் தப்பி செல்வதற்காக ஓடியுள்ளான். அதன் போது வீட்டின் பின் புறத்தில் வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளான். இதனையடுத்து அலவ்வ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு பொலிஸார் விரைந்து வந்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸாரும் , ஊர் மக்களும் இணைந்து ஏணியின் உதவியுடன் திருடனை பத்திரமாக மீட்டெடுத்துள்ளதுடன் கைது செய்துள்ளனர். திருட சென்ற இடத்தில் கிணற்றில் வீழ்ந்த திருடன் காப்பாற்றபட்டமை பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.