தந்தைக்கு மீன் வியாபாரம் செய்ய சொகுசுக் கார் வாங்கிக் கொடுத்த மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

636


ராமநாதபுரத்தில்..ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம்- காளியம்மாள். இத்தம்பதிக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், இரு மகள்களும் இருக்கின்றனர். மீன் வியாபாரம் செய்து வந்த சிவானந்தம் சுரேஷ் கண்ணனை கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படித்து வைத்தார்.தற்போது சுரேஷ் வளைகுடாவில் ஒரு கப்பல் நிறுவனத்தில் மாதம் 2 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பாரத்தை சுமந்த சுரேஷ் கண்ணன் தங்கைகள் இருவருக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார்.
இதனையடுத்து சைக்கிளில் மீன் வியாபாரம் செய்து வந்த தன் தந்தைக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். மகன் வாங்கி கொடுத்த எர்டிகா சொகுசு காரில் சிவானந்தன் மீன்களை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்து வருகிறார்.


தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இப்படிப்பட்ட மகனை பெறுவதற்கு இவன் தந்தை என்ன வரம் வாங்கி வாந்தானே என்று கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர்.