இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவதியின் மரணம்!!

1237

பேராதனையில்..

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான சாமோதி சந்தீபனி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.அது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக்குழு நாளை சனிக்கிழமை (15) வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் மருந்துகள் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையை கூட்டி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ருக்க்ஷான் பெல்லான கூறுகிறார்.

அத்துடன் இந்திய கடன் உதவியின் கீழ் தரம் குறைந்த நிறுவனங்களில் இருந்து தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்வதே இந்த நிலைக்கு காரணம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை பாணந்துறை வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.