மட்டக்களப்பில்..
மட்டக்களப்பைச் சேர்ந்த அநுராதபுரம் – ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (27.078.2023) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு அநுராதபுரம் – மிகிந்தலை பொலிஸாரை தொடர்பு கொண்டு வினவிய போது, சம்பவத்தில் மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் திலக்சன் (21 வயது) என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
அத்துடன் அவர் அநுராதபுரம் – ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் பயின்று வருபவர் எனவும் குறிப்பிட்டனர். குறித்த மாணவன் நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உயிரிழந்த மாணவனின் தாயார் தெரிவிக்கையில், நண்பர்களுடன் நீராடச் சென்றபோதே மகன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. என்னுடைய மகன் புலமைப்பரிசில் மூலம் பல்கலைக்கழகம் சென்றார்.அவர் கால்பந்து விளையாட்டிலும் இம்முறை தெரிவானார்.
மட்டக்களப்பு புனிதமிக்கல் கல்லூரியின் கல்வி பயின்று ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். படிப்பே குறிக்கோளாகக் கொண்டு இருந்த எனது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், முகாமைத்துவ விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவொன்று நீச்சல் தடாகத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.
அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஞ்சீவனி கினிகத்தர தெரிவித்துள்ளார்.