அவுஸ்திரேலியா செல்ல தயாரான வவுனியா குடும்பத்தினர் காத்தான்குடியில் கைது

542


arrest

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கிரான்குளம் விடுதி ஒன்றில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (30) அதிகாலை 12.30 மணியளவில் கிரான்குளத்திலுள்ள விடுதி ஒன்றில் வைத்து இரு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை உட்பட ஆண்கள் மற்றும் பெண்கள் என ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யதுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடிப் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுத்திப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து சட்டவிரேதமாக விற்கு செல்வதற்கு முற்பட்ட 23 பேர் பொலிஸாரினாலும் இராணுவத்தினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.