இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த முல்லைத்தீவு மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம்!!

1328

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தை சேர்ந்த இந்த மாணவி வர்த்தகப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த மாணவி இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்ற நிலையிலே இவ்வெற்றியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வர்த்தக பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.