வவுனியாவில் மாயமான சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபா சன்மானம்!!

2582

வவுனியாவில்..

வவுனியா – இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மாவான குணரட்னம் ரோகினி அறிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (19.09.2023) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் துண்டு பிரசுரம் ஒன்றும் அவரால் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வவுனியா – பாரதிபுரம் பகுதியில் 2 வயது சிறுமி கடந்த (25.08.2023) அன்றைய தினம் நீர்த் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார்.

இறந்த சிறுமியின் பிரேதம் இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் கடந்த (27.08.2023) ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டது. குறித்த சிறுமியின் பிரேதம் கடந்த (05.09.2023) அன்றைய தினம் சிறுமியின் பிரேதம் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த உண்மையான தகவல் தெரிந்தவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் சன்மானமாக வழங்கப்படும்.குறித்த சிறுமியின் சடலத்தை எடுத்தவர்கள் மீள கையளிக்கின்ற போது 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். எங்களது பிள்ளையின் உடல் வேண்டும் எனவும் குறித்த சிறுமியின் அம்மம்மா தெரிவித்துள்ளார்.