சிறுவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு..!

299


வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களில் இருந்து பெற்றோரிடம் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ். விஸ்வரூபன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இது தொடர்பான வைபவம் நடைபெற்றது.வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டிகளை வழங்கினார்.

முல்லைத்தீவு- வவுனியா- கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யுத்தத்தினாலும் குடும்ப வறுமையினாலும் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து பின் பெற்றோரிடம் இணைத்துக்கொள்ளப்பட்ட 150 மாணவர்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.cycle