தீவிரமடையும் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் : கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலை!!

976

தங்கம்..

இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையில் நடைபெறும் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அது தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த போர் நிலமையானது வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை உயர்வை நேரடியாக பாதித்துள்ளது என்று விலைமதிப்பற்ற உலோக பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி இலங்கை சந்தையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 1 இலட்சத்து 73,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.