உகண்டாவில் எண்ணெய் லொறியுடன் கார் மோதல்: தீயில் கருகி 29 பேர் பலி..!

380

உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள முக்கிய சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிய லொறி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் லொறியின் மீது மோதியது.

உடனே லாரியில் இருந்து வழிந்தோடிய பெட்ரோலை வழித்தெடுக்க ஒரு கூட்டத்தினர் சம்பவ இடத்தை நெருங்கினர். அப்போது தீடீரென அந்த லொறி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் எண்ணெய் சேகரிக்க வந்தவர்கள் உள்பட 29 பேர் தீயில் கருகி பலியாயினர்.

பாதிக்கப்பட்ட20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 20 மேற்பட்ட மோட்டர் சைக்கிள்கள் எரிந்து சாம்பாலாயின. மூன்று பக்கங்களிலும் ருவாண்டா, புரூண்டி, டி.ஆர். காங்கோ ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள உகாண்டாவின் கம்பாலா நகரம் முக்கியப்பகுதியாக விளங்குகிறது.

ஆபிரிக்க நாடுகளில் எண்ணெய் லாரிகள் விபத்துக்குள்ளாகும் போது வழிந்தோடும் எண்ணெயை சேகரிக்க வரும் மக்கள் இதுபோன்று பாதிப்புக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றாகும்.

uganda