வளர்ப்பு மகனை திருமணம் செய்த பெண் : 31 வயது வித்தியாசம், திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்!!

535

ரஷ்யாவில்..

ரஷ்யாவில் 53 வயது பெண் தனது 22 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அனாதைகளை தத்தெடுப்பது புனிதமான செயலாகவே கருதப்படுகிறது. உலகில் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து சொந்த குழந்தைகளாக வளர்த்து, படிப்பை கற்றுக்கொடுத்து திறமையானவர்களாக மாற்றுபவர்கள் உலகில் ஏராளம்.

ஆனால் ரஷ்யாவில் வெளிவந்த ஒரு கதை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை அறிந்தாலும் மக்களால் நம்ப முடியவில்லை. ஏனெனில் இங்கு ஒரு பெண் தனது வளர்ப்பு மகனையே திருமணம் செய்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு தற்போது 53 வயது. ஆனால் அந்த பெண் மணந்த ஆணுக்கு 22 வயது. அதாவது இருவருக்குமான வயது வித்தியாசம் 31 ஆண்டுகள். அந்தப் பெண் டாடர்ஸ்தானைச் சேர்ந்தவர்.

இங்கு இந்த வித்தியாசமான திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்ததும் மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இணையத்தில் நெட்டிசன்கள் கடமையான விமர்சனங்களை வீசியுள்ளனர்.

அந்தப் பெண் டாடர்ஸ்தானைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் Aisylu Chizhevskaya Mingalim. ஐசிலு 8 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுவன் டேனியலை அனாதை இல்லங்களில் இசை கற்பிக்கும் போது சந்தித்தார்.

அவர் டேனியலின் ஆர்வத்தை அங்கீகரித்து அவருக்கு இசை கற்பித்தார்.இந்த நேரத்தில், டேனியல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றார். அவருக்கு 14 வயதாக இருந்தபோது அவர் ஐசிலுவால் தத்தெடுக்கப்பட்டார்.

அவர்கள் அன்றிலிருந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர், ஆனால் இருவரும் அக்டோபர் 20 அன்று ஒருவரையொருவர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

டேனியலுடனான தனது உறவு குறித்து நீண்ட நாட்களாக வதந்திகள் பரவி வருவதாகவும், எனவே இந்த திருமணத்தின் மூலம் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் ஐசுலு தெரிவித்துள்ளார். ஐசிலுவும் அவரது வளர்ப்பு மகனும் கடந்த வாரம் கசானில் உள்ள ஒரு உணவகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தின் காரணமாக, குழந்தைகள் நல அதிகாரிகள் இப்போது ஐசிலுவின் மற்ற ஐந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை (ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்கள்) கைப்பற்றியுள்ளனர்.

ஐசிலு இந்த முடிவைக் கண்டித்துள்ளார், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்களின் உயிரியல் உறவினர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஐசிலு அந்த ஐந்து குழந்தைகளை மீண்டும் தன் பராமரிப்பில் வைத்திருக்க விரும்புகிறார். அவர் தனது குடும்பத்துடன் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு செல்ல நினைக்கிறார்.

அங்கு அவரது குடும்பம் இன்னும் ‘சுதந்திரமாக’ வாழ முடியும் என்று நம்புகிறார். ஐசிலுவிற்கு முந்தைய திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் விவரிக்கப்படவில்லை.