மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்!!

944


கண்டியில்யில்..கண்டி- குண்டசாலை தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் இன்றையதினம் (02.11.2023) இடம்பெற்றுள்ளது. மரக்கறி கடை ஒன்றின் மீதே இந்த மரம் விழுந்துள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த வான் மற்றும் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.