இரகசியம் ஒன்றை வெளிப்படுத்திய நபர் அடித்துக் கொலை!!

1030

களுத்துறையில்..

களுத்துறையில் இருவருக்கு இடையேயான இரகசியக் காதலை வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரும் சந்தேகநபரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போதே உயிரிழந்தவர் இந்த உறவை வெளிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசித்து வந்த 67 வயதான ரமோன் ஜயதிஸ்ஸ என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.