குருநாகலில்..
தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மாணவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவியின் தாயும் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்தபத்து முல்லை பிரதேசத்தை சேர்ந்த ஹிமாயா கருணாரத்ன என்ற மாணவியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மாணவி தனது தாயார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த போது மோட்டார் சைக்கிள் வீதியின் நடுவில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதியில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்திசையில் வந்த பேருந்து மோதியதில் தாய் மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மகள் உயிரிழந்துள்ளார்.