புறக்கோட்டை ஆடையக தீ விபத்து : சிகிச்சை பலனின்றி யுவதி உயிரிழப்பு!!

743


புறக்கோட்டையில்..புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெருவில் ஆடையகம் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் உயிரிழந்தார்.கடந்த 27ஆம் திகதி புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள ஆடையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.இதனையடுத்து, 9க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.குறித்த தீப்பரவலில் 23 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, தலவாக்கலை வட்டகொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.