உலகமே முடங்கும் : 2024 குறித்து உலா வரும் பாபா வாங்காவின் கணிப்புகள்!!

1569


பாபா வாங்கா..பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புக்கள் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. தற்போது உலகளவில் நடைபெறும் யுத்தங்களை அடிப்படையாக வைத்தே அவரின் அடுத்த ஆண்டுக்கான கணிப்புக்கள் தொடர்பில் பல்வேறு தரப்புகளிலும் பேசப்படுகிறது.இதனடிப்படையில், அவர் ஏழு தீர்க்கதரிசனங்களைச் கூறியுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும்.
ரஷ்யா ஜனாதிபதி புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார். ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். மேலும் ஒரு “பெரிய நாடு” அடுத்த ஆண்டு அணு ஆயுத சோதனைகள், தாக்குதல்களை நடத்தும்.


பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், மர்ம நோயால் பாதிக்கப்படுவார். சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உட்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள்” கணித்து எச்சரித்துள்ளார்.