யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து!!

1454


யாழில்..யாழ்ப்பாணத்தில் அதிவேகமாக பயணித்த டிப்பர் மற்றும் கன்ரர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இந்த விபத்துச் சம்பவம் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு அருகாமையில் இன்று (8) மாலை 03:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதிகள் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்துத் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டுள்ளனர்.