பாடசாலைக்கு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்த 12 வயது மாணவன்!!

711

ஹொரணயில்..

மாணவர் ஒருவர் இன்று (09) காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்து ஹொரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் புளத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சனபட வீதி, கொபாவ, பகுதியில் வசிக்கும் 12 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் பயணித்து பாடசாலைக்கு செல்ல பஸ்ஸில் செல்ல வேண்டியுள்ளது.

இன்று காலை குழந்தையின் தந்தை வீட்டில் இல்லாத காரணத்தினால் வீட்டிலிருந்து நடந்து பாடசாலைக்கு தனியாக சென்றுள்ளார்.இதன்போது சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் மாணவன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஹொரண வைத்தியசாலை பொலிஸார், புலத்சிங்கல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் சடலத்தின் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.