ஆண்டுக்கு 60 லட்சம் சம்பளம் பெறும் மாணவியின் கதை!!

691

உத்தரப் பிரதேசத்தில்..

இந்திய மாணவி ஒருவருக்கு LinkedIn தளத்தில், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. இந்திய மாநிலம், உத்தரப் பிரதேசத்தின் உனாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) முஸ்கன் அகர்வால் என்ற மாணவி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியலில் இந்த ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவருடைய GPA மதிப்பெண் 9.40.

குறிப்பாக, இவர் இதுவரை தனது கல்லூரியிலேயே அதிக சம்பளத்துக்கு தேர்வான பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு இந்தியாவில் TechGig Geek Goddess 2022 என்ற மிகப்பெரிய கோடிங் போட்டி நடைபெற்றது. இதில் 69,000 போட்டியாளர்களுடன் முஸ்கன் அகர்வால் கலந்துகொண்டார்.

இதில் அனைவரையும் வீழ்த்தி ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசை பெற்றது மட்டுமல்லாமல், India’s top coder என்ற பெருமையையும் பெற்றார். தொழில்நுட்பத்துறையில் முஸ்கன் அகர்வால் இத்தனை சாதனைகள் புரிந்தது தான் நெட்வொர்க்கிங் தளத்தில்வேலை கிடைத்ததற்கு காரணமாக அமைந்தது.

இவரை மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளராக ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் LinkedIn வேலைக்கு எடுத்துள்ளது. இவர், தற்போது பெங்களூருவில் இருந்து கொன்டு கடந்த 5 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். மேலும், இவரது கல்லூரியில் பயின்ற மற்றொருவரும் ஆண்டுக்கு ரூ.47 லட்சம் சம்பளத்திற்கு தேர்வாகியுள்ளார்.