வவுனியாவில் மொன்சூன் பருவநிலை மாற்றம் மற்றும் அதன் முன்னேற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!!

766

வவுனியா மாவட்டத்தில் மொன்சூன் பருவநிலை மாற்றம் மற்றும் அதன் முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று ( 10.11.2023) இடம்பெற்றது.

மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தின் தற்போதைய மொன்சூன் பருவநிலை மாற்றம், மற்றும் இக்கட்டான சந்தர்ப்பம் ஏற்படும் வேளையில் அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உயர் அதிகாரி, நீர்பாசன திணைக்கள பொறியியலாளர், கமநல சேவைகள் திணைக்கள உயர் அதிகாரி, விவசாய திணைக்கள பணிப்பாளர், இராணுவம், பொலிஸ்,உள்ளிட்ட பிரிவுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.