ராமநாதபுரத்தில்..
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த கண்ணன் மகள் திவ்யதர்ஷினி(12).இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்றுமுன்தினம் இரவு தனது தாய்மாமன் பாண்டியராஜன்(38) என்பவருடன், பரமக்குடி ஐந்து முனை சாலை அருகேயுள்ள முருகன் கோயிலுக்கு நடந்து சென்றார்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதில் திவ்யதர்ஷினியும், பாண்டியராஜனும் உடல் நசுங்கி அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர். தகவல் அறிந்துவிரைந்து வந்த போலீஸார் காரைஓட்டி வந்த பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் (42) என்பவரைக் கைது செய்தனர்.
அவர் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. உயிரிழந்த இருவரின் உடல்கள்உடற்கூறு ஆய்வுக்குப் பின் உறவி னர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.