
புலஸ்திபுர பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 17 பேர் காய் ஒன்றை உட்கொண்டு விஷமாகியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலக்கடலை (கச்சான்) என நினைத்து குறித்த காயை இம் மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.
புலஸ்திபுர பிரதேச பாடசாலை ஒன்றின் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவர்களெ இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஏழு பேர் மேலதிக சிகிச்சைகளுக்கான பொலன்நறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.






