இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்..!

755

CRICKET-JAM-WIS-IND

மேற்கிந்தியா, இலங்கை, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில நடந்து வருகிறது. இதில் நேற்று கிங்ஸ்டனில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய அணிகள் மோதின.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தற்காலிக தலைவர் வெய்ன் பிராவோ காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். தலைவர் பதவியை பொல்லார்ட் கவனித்தார். நாணய சுழற்சியைவென்ற மேற்கிந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஏமாற்றம் அளிக்கும் வகையில் 10 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கெமார் ரோச் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை பெற்றது. 230 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 47.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்த்து.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஜொன்சன் சார்ள்ஸ் 97 ஓட்டங்களையும் பிராவோ 55 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்ட நாயகனாக ஜொன்சன் சார்ள்ஸ் தேர்வு செய்யப்பட்டார்