தண்ணீர் தொட்டியில் ஒன்றரை வயது குழந்தையுடன் சடலமாக கிடந்த தாய்.. விசாரணையில் அதிர்ச்சி!!

1008

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு வைஷாலி என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்நிலையில், வீட்டின் தண்ணீர் தொட்டியில் குழந்தை வைஷாலியுடன் மீனா சடலமாக கிடந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மீனாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும், மீனாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மீனாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒரே வீட்டில் தனித்தனியே சமைத்து வந்தது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே கொலையா? தற்கொலையா என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.